Map Graph

புதுச்சேரி மாவட்டம்

புதுச்சேரியில் உள்ள மாவட்டம்

புதுச்சேரி மாவட்டம் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். புதுச்சேரி மாவட்டம் 290 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள், தென் இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரமாக அமைத்துள்ளது. இந்த மாவட்டத்தின் சராசரி ஆண்டு வெப்ப நிலை 30 செல்சியசு ஆகும். இம்மாவடத்தில் 70-85% ஈரப்பதம் நிலவும் பகுதி ஆகும். மேலும் வடகிழக்கு பருவமழை பொழியும் பகுதியாகும். இம்மாவட்டத்தின் பெரும் பகுதி, சமமான பகுதிகள் ஆகும். அவை கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 15 மீ உயரத்தில் உள்ளது. மேலும் புதுச்சேரி பகுதி செஞ்சி ஆறு மற்றும் பெண்ணையாற்றின் இடையே அமைந்துள்ள கடைமடை பகுதியாகும். மேலும், பல ஏரிகள், குளங்கள் நிறைந்த பகுதியாகும். புதுவையின் வடமேற்கு பகுதி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 30 மீ. உயரத்தில் அமைந்து உள்ளது.

Read article
படிமம்:Pondicherrry_,Puducherry.JPGபடிமம்:Puducherry_District_Outline.pngபடிமம்:India_location_map.svgபடிமம்:Pondicherry_map.pngபடிமம்:Puducherry_Coast.jpg